
அமெரிக்காவில் 700 தியேட்டர்களில் அண்ணாத்த ரிலீஸ்
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் "நார்மல்" நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் "அண்ணாத்த" படம் மக்களை இன்னும் அதிக அளவில் தியேட்டர்கள் பக்கம் வரவழைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் "அண்ணாத்த" தமிழ்ப் படம் 416 தியேட்டர்களில் திரையிட உள்ளார்கள். இதன் தெலுங்கு டப்பிங்கான "பெத்தன்னா" 261 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. சிங்கப்பூரில் 23 தியேட்டர்களில் திரையிடப்ட உள்ளது. இது இன்றைய நிலவரம். அடுத்த சில நாட்களில் இன்னும் கூடலாம்.
வெளிநாட்டு உரிமையை கியூப் சினிமா நிறுவனம் பெற்றுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!