
இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் பாலோயர்களைத் தொட்ட காஜல் அகர்வால்
தற்போது அதிகமான படங்களில் கூட காஜல் நடிக்கவில்லை. தமிழில் "பாரிஸ் பாரிஸ்" படத்தில் நடித்து முடித்துள்ளார். வெளியீட்டிற்காக இந்தப் படம் காத்துக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுடன் "இந்தியன் 2" படத்தில் நடித்து வருகிறார்.
தென்னிந்திய அளவில் இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோயர்களைப் பெற்றிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு 23 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். இவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் காஜல் அகர்வால். 19.4 மில்லியன் பாலோயர்களுடன் சமந்தா, 19.2 மில்லியன் பாலோயர்களுடன் டாப்ஸீ, 18 மில்லியன் பாலோயர்களுடன் ஸ்ருதிஹாசன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.
இந்திய அளவில் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா 69.5 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இன்ஸ்டாவில் 20 மில்லியன் பாலோயர்களைப் பெற்றதற்கு வீடியோ ஒன்றைப் பதிவு செய்து தனது ரசிகர்களுக்கும், பாலோயர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் காஜல்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!