‛கடாவர் - அசத்தும் அமலாபால் : தயாரிப்பாளராக களமிறக்கம்
அக் 26, 2021
Advertisement
அமலாபால் தயாரித்து, நடிக்கும், ‛கடாவர்" படத்தை அனுாப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார். இதன் முதல் போஸ்டர் இன்று அமலாபாலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த படத்தையுமே முதல் போஸ்டரில் சொல்லியுள்ளனர். தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கும் அமலாபால், ஒரு வாரம் மருத்துவமனைக்கு சென்று துறை சார்ந்த மருத்துவர்களிடமும் பயிற்சி பெற்றார். அதுல்யாரவி, ஹரிஷ் உத்தமன், ரித்விகா, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛அசல் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராகவே அமலாபால் மாறிவிட்டார்" என இயக்குனர் கூறியுள்ளார்.
12 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் நடிகை அமலாபால் முதன்முறையாக தனது பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, முதல் படமாக இந்த படத்தை தயாரித்து நடிக்கிறார்.
12 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் நடிகை அமலாபால் முதன்முறையாக தனது பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, முதல் படமாக இந்த படத்தை தயாரித்து நடிக்கிறார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!