
விஸ்கி விளம்பரம் - ரெஜினாவுக்கு எழும் கண்டனங்கள்
இந்நிலையில் நடிகை ரெஜினா "விஸ்கி" ஒன்றிற்கான விளம்பரம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், “9 வயதில் தொகுப்பாளராக வந்து, பின்னர் விளம்பரப்படங்களில் நடித்து சினிமாவுக்குள் வந்தேன். எனது வாழ்க்கையில் எனது இந்தப் பயணம் ஒரு பொக்கிஷம்,” எனக் குறிப்பிட்டு விஸ்கியைப் பற்றியும் பெருமையாகப் பதிவிட்டுள்ளார்.
ரெஜினாவின் இந்த விளம்பரத்திற்கு பலரும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். “ஆல்கஹாலை விளம்பரப்படுத்த வேண்டாம், உங்களைப் போன்ற நடிகைகளை அன்பாலோ செய்கிறேன், வெளிப்படையாக இப்படி ஆல்கஹாலுக்கு விளம்பரம் செய்ய அனுமதி இருக்கிறதா, ஆல்கஹாலுக்குப் போய் பிரமோட் பண்ணிட்டு இருக்க, கேவலமா இல்லையா,” என பலவிதமான கண்டனக் கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவு செய்துள்ளார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!