
ஓடிடி-யிலும் தீபாவளி போட்டி ?
கடந்த வருடம் முதல் ஓடிடி தளங்களிலும் தீபாவளிக்குப் போட்டி ஆரம்பமானது. அப்போது சூர்யா நடித்த "சூரரைப் போற்று", நயன்தாரா நடித்த "மூக்குத்தி அம்மன்" ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின. இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த வருட தீபாவளிக்கும் ஓடிடி தளத்தில் கடும் போட்டி நிலவ உள்ளது. இந்த வருட தீபாவளிக்கும் சூர்யா நடிக்கும் படம் வெளிவருகிறது. "ஜெய் பீம்" படத்தை நவம்பர் 2ம் தேதியே ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள். அடுத்து சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள "எம்ஜிஆர் மகன்" படத்தையும் ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இவை தவிர மேலும், சில முன்னணி ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.
தீபாவளிக்கு தியேட்டர்களில் "அண்ணாத்த, எனிமி" மட்டுமே வெளியாக உள்ள நிலையில் ஓடிடி தளங்களில் அவற்றை விட அதிகமான படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!