
விஜய்சேதுபதியின் படப்பிடிப்பு தளத்திற்கு துல்கர் சல்மான் விசிட்
இந்தநிலையில் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி உள்ளார் நடிகர் துல்கர் சல்மான். பிரபல நடிகர்களின் படப்பிடிப்பு அருகருகே நடைபெற்றால் ஒருவரை ஒருவர் சென்று சந்தித்துக் கொள்வது இப்போது புதிய டிரெண்ட் ஆகவே மாறிவிட்டது. தற்போது "சுப்" எனும் இந்திப்படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். அந்த வகையில் அருகில் விஜய்சேதுபதியின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு, அங்கே விசிட் அடித்துள்ளார் துல்கர் சல்மான். இதேபோல சமீபத்தில் கூட மும்பையில் துல்கர் சல்மானின் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு, நடிகர்கள் அரவிந்த்சாமியும் குஞ்சாக்கோ போபனும் விசிட் அடித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!