கிராமி விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பரிந்துரை
அக் 20, 2021
Advertisement
உலகளவில் இசைக்கு வழங்கப்படும் விருதுகளில் முக்கியமானது கிராமி. இந்தாண்டுக்கான 64வது கிராமி விருதுக்கு பாடல்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஹிந்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கிர்த்தி சனோன், பங்கஜ் திரிபாதி நடிப்பில் வெளியான மிமி படத்தில் இடம்பெற்ற சவுண்ட் டிராக் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை டுவிட்டரில் மகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளார் ரஹ்மான்.
ஏற்கனவே கடந்த 2009ல் ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ரஹ்மான், அந்த ஆண்டு இந்த படத்திற்காக இரண்டு கிராமி விருதுகளையும் வென்றார். இப்போது மீண்டும் ஒரு முறை அவரது பட பாடல்கள் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் அவருக்கு விருது கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!