
தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் எம்ஜிஆர் மகன்
இப்படம் ரிலீஸிற்கு தயாராகி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் கொரோனா பிரச்னையால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இப்போது தியேட்டர்கள் திறக்கப்பட்ட போதிலும் படத்தை ஒடிடியில் வெளியிட முடிவெடுத்துள்ளனர். அதன்படி வருகிற தீபாவளி தினமான நவ., 4 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, ‛‛உறவுன்னு பாத்தா அப்பன் மவன்டா, உரசிப் பாக்க ஜில்லாவுலயே எவன்டா!"" என்ற கேப்ஷனை கொடுத்துள்ளனர்.
தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த, விஷால்-ஆர்யாவின் எனிமி படங்கள் தியேட்டர்களிலும், சூர்யாவின் ஜெய்பீம் படம் ஓடிடி தளத்திலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!