
அண்ணாத்தவுக்கு பாடிய ஆண்டனி தாசன்
இந்த நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு பின்னணி பாடல் பாடி அடுத்த கட்டத்தை அடைந்துள்ளார். அண்ணாத்த படத்தின் 3வது பாடல் நேற்று வெளியானது. மருதாணி செவப்பு செவப்பு மகராணி சிரிப்பு சிரிப்பு... என்ற பாடலை நாட்டுப்புற மெட்டில் பாடி உள்ளார். அவருடன் வந்தனா சீனிவாசன் இணைந்து பாடி உள்ளார். அமுதவன் எழுதிய பாடலுக்கு இமான் இசை அமைத்துள்ளார்.
இந்த பாடலுக்கு ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு ஆடியுள்ளனர். இது ஒரு கொண்டாட்ட பாடலாக படமாக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷின் பூப்புனித நன்னீராட்டு விழா, பாடலுக்கான சூழலாக அமைந்துள்ளது. நூற்றுக்கணகான துணை நடிகர்கள், நடன கலைஞர்களை கொண்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!