
மாநாடு விலகியது, எனிமிக்கு லாபம்?
ஒரே சமயத்தில் "அண்ணாத்த" படத்துடன் மேலும் இரண்டு படங்களுக்குத் தியேட்டர்களை ஒதுக்குவதில் சிரமம் என தியேட்டர்காரர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாம். "மாநாடு" படத்தை 500 தியேட்டர்களிலாவது வெளியிட வேண்டும் என அதன் தயாரிப்பாளர் விரும்பினாராம்.
"அண்ணாத்த" படத்திற்கு மட்டுமே 600 தியேட்டர்கள் போய்விடும் நிலையில் தற்போது "எனிமி" படத்திற்கு 300 தியேட்டர்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது. "மாநாடு" போட்டியிலிருந்து விலகியதால் அது "எனிமி" படத்திற்கு லாபமாக அமைந்துள்ளது. மேலும், "எனிமி" படத்திற்கான வியாபாரமும் முடிவடைந்துவிட்டது.
"அண்ணாத்த, எனிமி" இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!