
83 வயதில் நாயகன் ஆனார் நம்பிராஜன்
ஜி.ஜி.ஆர். மூவி எண்டர்பிரைசஸ் சார்பில் ஏ.இசட் .ரிஜ்வான் தயாரிக்கும் இந்த படத்தில் இளம் நாயகன் ஒருவரும் அறிமுகமாகிறார். முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க இருக்கிறார்கள். இயக்குனர் பாரதி கணேஷிடம் பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற உடுமலை எஸ்.அஜ்மீர் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: வயது குறைந்த நடிகர்கள் மேக்கப் போட்டு முதுமை தோற்றத்தில் நடித்த படங்கள் பல உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல். ரஜினி, விஜயகாந்த், வி.கே.ஆர், சத்யராஜ், பிரபு, சரத்குமார், என நிறைய நடிகர்கள் அப்படி நடித்த படங்கள் உள்ளது. ஒரிஜினலாக 83 வயதுடைய பி.வி.நம்பிராஜன் நாயகனாக நடிக்கும் படம் இது. நவம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது. திண்டுக்கல், பித்தளைபட்டி, ஆத்தூர், சின்னாளபட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய ஊர்களில் படமாகிறது. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!