
தீபாவளி போட்டியிலிருந்து விலகும் மாநாடு
இந்த நான்குமுனைப் போட்டியிலிருந்து தற்போது "மாநாடு" படம் விலகும் எனத் தெரிகிறது. "அண்ணாத்த" படத்தை மட்டும் தமிழ்நாட்டில் மட்டும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால், "மாநாடு, எனிமி" ஆகிய படங்களுக்கு அதிகபட்சமாக தலா 200 தியேட்டர்கள் கிடைத்தாலே அதிகம் என்கிறார்கள்.
எனவே, "அண்ணாத்த" படத்துடன் போட்டி போடாமல் வேறொரு நாளில் படத்தை வெளியிடலாம் என "மாநாடு" தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "மாநாடு" படத்தை 500க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டால் தான் எதிர்பார்த்த வசூல் சில நாட்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் அவர் இந்த முடிவை எடுக்க இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
"எனிமி" படமும் போட்டியில் இருக்குமா அல்லது கிடைத்த தியேட்டர்களே போதும் என படத்தை வெளியிடுவார்களா என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!