
வெப் சீரிஸில் நடிக்கும் த்ரிஷா
‛கர்ஜனை", ‛சதுரங்க வேட்டை 2", ‛ராங்கி" உள்ளிட்ட படங்களை முடித்துவிட்ட த்ரிஷா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛பொன்னியின் செல்வம்" படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புதிதாக கதைகள் கேட்டு வந்த த்ரிஷா, வெப் சீரிஸ் ஒன்றின் கதைக்கு ஓகே சொல்லியுள்ளார். தெலுங்கில் தயாராகும் இந்த வெப் சீரிஸை சூர்யா வங்கலா இயக்கவுள்ளார். இதன் பணிகள் துவங்கப்படவுள்ளன. பிருந்தா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!