
ஷங்கர், ராம்சரண் படம் பற்றி கியாரா தந்த அப்டேட்
“இது ஷங்கர் சாரின் படம். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அவருடன் பணிபுரிவது எனக்குப் பிடித்த ஒன்று. நம்பமுடியாத ஒரு இயக்குனர். அவருடைய காலத்தில் முன்னோடியாக இருந்தவர். எனது கதாபாத்திரம் பற்றி சொல்ல முடியாது. ஆனால், போஸ்டரை வைத்து இது ஒரு அரசியல் படம் என சொல்வீர்கள்.
படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை. ஆனால், படத்தில் ஒரு அற்புதமான மெசேஜ் இருக்கிறது, அற்புதமான கதை இருக்கிறது, ஒரு பவர்புல்லான படமாக அமையும். ஷங்கர் சாரின் ஸ்டைலில் இப்படம் அமையும்,” எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. நவம்பர் மாதம் முதல் கியாரா படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!