
டுவிட்டரில் 5 மில்லியன் ரசிகர்கள் - காஜல் மகிழ்ச்சி
இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் ஆண்டு கொரோனா நேரத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு ஏராளமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தை 5 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருவதாக காஜல் அகர்வால் அறிவித்துள்ளார். இதற்கு காரணமான ரசிகர்களுக்கும் அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!