கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு
நவ 13, 2025
Advertisement
ஹரி மகாதேவன் இயக்கத்தில் ‛பிக்பாஸ்" பூர்ணிமா ரவி நடித்த படம் ‛யெல்லோ". இந்த படத்தின் படப்பிடிப்பு கொரில்லா மேக்கிங் முறையில் நடந்ததாம். அதாவது, நடிகர், நடிகைகள், படக்குழுவினர் ஒரு வேனில் கிளம்பி ஆங்காங்கே படப்பிடிப்பு நடத்தினார்களாம். சிலசமயம் பல மணி நேரம் தொடர்ச்சியாகவும் படப்பிடிப்பு நடந்துள்ளதாம். பல முக்கியமான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளன.
படத்தின் தயாரிப்பாளர் தனது கம்பெனிக்கு சொந்தமான லென்ஸ், படப்பிடிப்பு கருவிகளை விற்று கஷ்டப்பட்டு இந்த படத்தை முடித்து இருப்பதாக தகவல். இதில் புதுமுக ஹீரோ இருந்தாலும் படத்தை தொடர்ச்சியாக நடத்த ஹீரோயின் பூர்ணிமா தான் அதிகம் உதவியிருக்கிறார். படக்குழுவை ஒருங்கிணைத்து இருக்கிறார் என தகவல். இதில் இயக்குனர் பிரபுசாலமன் சிறப்பு வேடத்தில் வருகிறார். மறைந்த டில்லி கணேஷ் முக்கிய கேரக்டரில் நடித்து இ ருக்கிறார். படம் டிசம்பர் 21ல் ரிலீஸாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!