
யாத்திசை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி
மே 11, 2023
Advertisement
இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் நசக்தி மித்ரன், செயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் "யாத்திசை". சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய கதை கருவை மையமாக கொண்டு உருவானது. குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படமாக என பலரும் பாராட்டினர். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் "யாத்திசை" படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியது. இதையடுத்து இந்த படம் வருகின்ற 12-ந்தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!