விக்ரம் நடித்த சாமி -2 படத்தை இயக்கிய ஹரி அதன் பிறகு சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்கயிருந்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. அதையடுத்து அருண் விஜய் நடிப்பில் யானை என்ற ஒரு ஆக்சன் கதையை இயக்கி வருகிறார்கள். கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டீசர் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஹரியும், அருண் விஜய்யும் இணைந்து உள்ள முதல் படம் என்பதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!