
தமிழ் சினிமாவில் யாளி
மே 07, 2025
Advertisement
சிங்கத்தின் உடல், யானை தலையை கொண்ட கற்பனை மிருகம் யாளி. பல கோயில்களில் இந்த சிற்பத்தை காணலாம். பிரபதீஷ் சாம்ஸ் இயக்கும் கஜானா படத்தில் இந்த மிருகத்தை கிராபிக்ஸ் மூலம் கொண்டு வந்து இருக்கிறார்கள். இனிகோ, வேதிகா, யோகிபாபு கொண்ட டீம் புதையலை தேடி காட்டுக்குள் செல்கிறார்கள். காட்டில் இருக்கும் மிருகங்கள் அதை பாதுகாக்கின்றன. அப்புறமென்ன சண்டை தான். புதையலை கைப்பற்றினார்களா என்பது கதை. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பல மிருகங்களுடனான சண்டை இந்த படத்தில் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் வேலைகள் மட்டுமே பல மாதங்கள் நடந்துள்ளதாம். கஜானா படத்தின் பார்ட் 2வும் உருவாக உள்ளது. இதில் மாறுபட்ட வேடத்தில் சாந்தினி நடிக்கிறார். அவருக்கு அதிரடி சண்டைகாட்சி இருக்கிறதாம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!