
நடிகை உமாவிற்கு புற்றுநோய்: மீண்டு வருவேன் என உருக்கமான பதிவு
இந்த நிலையில் அவரை புற்று நோய் தாக்கி இருப்பதாகவும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து உமா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “எனக்கு ஆரம்பக்கட்ட மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிர்ச்சி, மறுப்பு, நம்பமுடியாத நிலை எனப் பல உணர்வுகள். இதை ஜீரணிப்பதும் ஏற்றுக் கொள்வதும் எளிதல்ல. "ஏன் எனக்கு? ஏன் இப்போது? அடுத்து என்ன நடக்கப்போகிறது?" எனப் பல கேள்விகள் என் மனதை ஆக்கிரமித்தன.
என்னுடன் இணைந்து தைரியமாக இருந்த என் கணவருக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்; என் மகனுக்கு அவனது மனவலிமைக்காக நன்றி; அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையுடன் என்னுடன் இருக்கும் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் தைரியமே என் தைரியமாகவும் மாறியுள்ளது,
கண்ணீர், பிரார்த்தனைகள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றின் மூலம், அதிர்ச்சியிலிருந்து உண்மையை ஏற்கும் நிலைக்கு மாறியது ஒரு தனிப் பயணமாகவே அமைந்தது. மனம் தளரவோ அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ளவோ நான் தயாராக இல்லை. வாழ்க்கையை அதன் எதார்த்தமான வடிவத்தில் எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளவே முயல்கிறேன்.
ஒவ்வொரு நாளையும் தனித்தனியாக எதிர்கொள்ளப் போகிறேன். என்னிடமுள்ள முழு வலிமையையும் கொண்டு இதை எதிர்த்துப் போராடப் போகிறேன்; நிச்சயம் குணமடைந்து மீண்டு வருவேன் என்று உறுதியளிக்கிறேன். தயவுசெய்து எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். இந்தப் பயணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள் (2)
கருத்து எழுதுங்கள்இறையருளால் நலமாகி வெற்றியோடு மீண்டு வரட்டும்.
நிச்சயமாக அந்த ஆண்டவன் ஆசியால் குணமடைந்து வருவீர்கள்