
ஓடிடியில் மீண்டும் ஹிட் கொடுப்பாரா நயன்தாரா ?
ஓடிடி மூலம் மக்களிடம் நேரடியாகச் செல்ல முடிகிறது என்பதைப் புரிந்து கொண்டதால் தான் "மூக்குத்தி அம்மன்" புறக்கணிப்பு விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு "நெற்றிக்கண்" படத்திற்காக டிவி பேட்டி வரை நயன்தாரா சென்றிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இப்படத்தில் நயன்தாரா கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். 2011ல் வெளிவந்த கொரியன் படமான "பிளைன்ட்" படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் இந்தப் படம்.
டிரைலரைப் பார்த்த போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த, "சைக்கோ" படம் போலவே இருந்தது. இருந்தாலும், நயன்தாரா நடிப்பதால் "நெற்றிக்கண்" படத்திற்கு தனி வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது.
தனது முந்தைய வெளியீடான "மூக்குத்தி அம்மன்" போலவே ஓடிடியிலும் "நெற்றிக்கண்" படத்தையும் ஹிட் கொடுப்பாரா நயன்தாரா என்பது நாளை தெரிந்துவிடும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!