யாருக்கான பதிவு... நிவேதா பெத்துராஜின் திருக்குறள் வைரல்!
ஆக 04, 2026
Advertisement
மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்து மாடலிங்கில் நுழைந்து பின்னர் ‛ஒரு நாள் கூத்து" படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து ‛டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்தவர் அவரை திருமணம் செய்ய இருந்த நிலையில் அவரைவிட்டு பிரிந்தார்.
இந்நிலையில் அவ்வப்போது வலைதளங்களில் இவர் பதிவிடும் விஷயங்கள் கவனம் ஈர்க்கும். அந்தவகையில் தற்போது திருக்குறள் ஒன்றை பதிவிட்டு இருப்பது வைரலானது.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.
- திருக்குறள் 183
இதன் அர்த்தம்
பிறர் இல்லாதபோது அவரை பற்றி இழிவாக பேசுவதும், நேரில் காணும்போது பொய்யாக நடித்து வாழ்வதும் மிகப்பெரிய இழிவாகும். அத்தகைய கேவலமான வாழ்க்கையை வாழ்வதை விட இறந்து விடுவது நல்லது. அதுவே அறநூல்கள் கூறும் புகழையும் நன்மையையும் தரும்.
எதற்காக நிவேதா இப்படி ஒரு குறளை பதிவிட்டார். இவரது பதிவு யாருக்கானது என்பது புரியாமல் ரசிகர்கள் கீழே கமென்ட்டில் அவரவர் இஷ்டத்திற்கு பதிவுகளை குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!