
கைதி 2 எப்போது ஆரம்பமாகும் ?
ஆனால், "கூலி" படத்தை இயக்கிய பின் லோகேஷ், அவரே கதாநாயகனாக நடிக்கும் ‛டிசி" படத்தில் பிஸியாகிவிட்டார். இதனால், "கைதி 2" படம் எப்போது ஆரம்பமாகும் என்பது கேள்வியாகவே இன்னும் தொடர்கிறது. இதனிடையே, லோகேஷ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. "ஜனநாயகன்" படத்தைத் தயாரித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளதாம்.
கார்த்தி நடித்துள்ள "வா வாத்தியார்" அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அடுத்து அவர் நடித்துள்ள "சர்தார் 2" வெளியாகும். தற்போது "மார்ஷல்" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பிறகு "கைதி 2" ஆரம்பமாகுமா அல்லது அடுத்த வருடத்திற்குத் தள்ளிப் போகுமா என்பது போகப் போகத் தெரியும்.d




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!