
எல்.ஐ.கே படம் எப்போது ரிலீஸ்?
அக் 19, 2024
Advertisement
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கிர்த்தி ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் " எல்.ஐ.கே" (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி கதையில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகளில் உள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த அனிருத் பாடிய தீமா பாடல் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த படத்தை அடுத்த வருட சம்மருக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!