
இயக்குனர் மித்ரனுக்கு டும் டும்
ஜூன் 24, 2022
Advertisement
"இரும்புத்திரை, ஹீரோ" படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். தற்போது கார்த்தியை வைத்து சர்தார் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு படம் வெளிவர உள்ளது. இந்நிலையில் இவருக்கும் சினிமா பத்திரிக்கையாளரான ஆஷா மீரா என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த தகவலை சம்பந்தப்பட்டவர்கள் பகிரவில்லை. ஆனால் ‛இன்று நேற்று நாளை, அயலான்" படங்களின் இயக்குனர் ரவிக்குமார் இவர்கள் திருமண நிச்சய போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகே இந்த விஷயம் வெளியில் தெரிந்தது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!