
வேவ்ஸ் ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம்
பெருநகரம் முதல் குக்கிராமங்கள் வரை, அனைத்து தரப்பு மக்களும், தரமான ஓ.டி.டி., சேவையை பெறும் வகையில், "பாரத்நெட்" நிறுவனத்துடன் இணைந்து, "வேவ்ஸ்" ஓ.டி.டி., சேவையை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
கோவா தலைநகர் பணஜியில் நேற்று முன்தினம் துவங்கிய, 55வது சர்வதேச திரைப்பட விழாவில், கோவா முதல்வர் பிரமோத் சவந்த், "வேவ்ஸ்" ஓ.டி.டி., சேவையை துவக்கி வைத்தார். ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், வங்காளம், மராத்தி, கன்னடா, மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி உட்பட 12 மொழிகளில், 10க்கும் மேற்பட்ட வகையான நிகழ்ச்சிகள் வழங்கப்பட உள்ளன.
பொழுதுபோக்கு, விளையாட்டு, வானொலி சேவை, நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என, 65க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்களின் சேவைகளும் வழங்கப்படும். தொழில்நுட்ப உதவி யுடன் இணைய வழி வணிகத்திற்கு, "வேவ்ஸ்" ஓ.டி.டி., பாலமாக அமைய உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!