37 மில்லியன் பார்வைகளைப் பெற்ற விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்?
மார் 18, 2026
Advertisement
தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா, மமிதா பைஜு மற்றும் பலர் நடித்துள்ள படம் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்". இப்படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்த டீசர் 24 மணி நேரத்திற்குப் பிறகு மொத்தமாக 37 மில்லியன் பார்வைகளைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
யு டியூப் தளத்தில் இப்படத்தின் தமிழ் டீசர் தற்போது 9+ மில்லியன் பார்வைகளைக் கடந்தும், தெலுங்கு டீசர் 3+ மில்லியன் பார்வைகளைக் கடந்தும் இருக்கிறது. மொத்தமாக 13+ மில்லியன் பார்வைகளை இரண்டு மொழிகளிலும் கடந்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் அறிவித்தபடி மொத்தமான 37 மில்லியன் பார்வைகளில் யு டியூப் தளத்தில் 13+ மில்லியன் பார்வைகள்தான் வந்துள்ளது. மீதமுள்ள 24 மில்லியன் பார்வைகள் எந்த சமூக வலைத்தளத்தில் வந்துள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இது குறித்த "பிரேக் அப்" எதையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. அதேசமயம் இன்ஸ்டாவில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்ட டீசர் என குறிப்பிட்டுள்ளனர்.
சூர்யா நடித்து வெளிவந்த படங்களில் "கங்குவா" பட டீசர் யு டியுப் தளத்தில் 24 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வைகளைப் பெற்றதுதான் அவரது சாதனையாக உள்ளது. அதற்குப் பின் வந்த அவரது படங்கள் அந்த சாதனையை முறியடிக்கவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!