துப்பறிவாளன் 2, கிடப்பில் போட்ட விஷால்
செப் 01, 2021
Advertisement
நடிகர் விஷால் அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், தயாரித்து நடிக்க ஆரம்பித்த படம் "துப்பறிவாளன் 2". இப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு ஆரம்பமாகி ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்தது. படத்திற்கு மிஷ்கின் அதிக பட்ஜெட் இழுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின் அப்படத்திலிருந்து விலகினார் மிஷ்கின். விஷால் தானே படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், அதன்பின் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடக்கவில்லை.
அதற்குப் பிறகு அவர் நடித்த "ஆக்ஷன், சக்ரா" ஆகிய படங்கள் வெளிவந்துவிட்டன. "எனிமி" என்ற படத்தில் விஷால் நடித்து முடித்துவிட்டார். அடுத்து "வீரமே வாகை சூடும்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இவற்றோடு தனது 32வது படத்தில் இன்று நடிக்க ஆரம்பித்துவிட்டார் விஷால். "துப்பறிவாளன் 2" படம் மேற்கொண்டு நடக்குமா நடக்காதா என்பது குறித்து அவர் எதுவும் பேசுவதில்லை.
"துப்பறிவாளன்" படத்தின் முதல் பாகம் 2017ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, "துப்பறிவாளன் 2" படத்தை விட்டு விலகிய பிறகு தான் ஆரம்பித்த, "பிசாசு 2" படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் மிஷ்கின் இன்று முடித்துவிட்டார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!