
15 வருடங்களுக்கு பின்னும் வில்லன் நடிகரை வியக்கவைத்த அஜித்
“15 வருடங்களுக்கு முன் ஜனா என்கிற படத்தில் அஜித் சாருக்கு வில்லனாக நடித்திருந்தேன். படத்தில் சிறிய வில்லன் வேடம் தான் என்றாலும், அவர் ஏதோ என்னுடன் நீண்ட நாட்கள் பழகியவரை போல அன்புடனும் மரியாதையுடனும் நடத்தினார். கேரவன் என்பதை நான் பார்த்ததோ கேட்டறிந்ததோ கூட இல்லாத அந்த சமயத்தில், ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அவர் தனது கேரவனுக்குள் என்னை அழைத்து சென்று ஜாலியாக பேசுவார். அவருடைய உணவை என்னுடன் பகிர்ந்துகொண்டு சாப்பிட வைப்பார்.
அதன்பின் இத்தனை வருடங்களுக்கு பிறகு அவர் மரைக்கார் படத்தின் செட்டிற்கு எதிர்பாராத விசிட் அடித்தபோது அவரை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனேன்.. அவர் என்னை பார்த்ததுமே எனக்கும் அவருக்குமான பழைய நினைவுகள் உடனே என் மனதில் ஓடியது. அருகே வந்து என் கைகளை பிடித்துக்கொண்ட அஜித் சாரும் அதை உணர்ந்துகொண்டார். என்னை பற்றி அன்புடன் விசாரித்தார். இத்தனை வருடங்களில் அவர் கொஞ்சம் கூட மாறவில்லை. அவர் தற்போது நடித்துவரும் வலிமை படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.
சீனியர் நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவரான பாபுராஜ், சில வருடங்களுக்கு முன் விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!