விக்ரம் பிரபுவின் ரெய்டு டிரைலர் வெளியானது
நவ 03, 2023
Advertisement
இறுகப்பற்று படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ரெய்டு. ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இவர்களுடன் சவுந்தரராஜா, ரிஷி ரித்விக், அனந்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்தி இயக்கி இருக்கிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ள இந்த ரெய்டு படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் அழகுச் செல்லம் என்ற இரண்டாவது பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ரவுடிகளை களையெடுத்து நகரை தூய்மையாக வைக்க போராடும் அதிரடி ஆக்ஷன் போலீஸாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். ‛‛ரவுடிசத்துக்கு ஒரு பிராண்ட் கிரியேட் பண்ணப்போறேன், சிட்டியில் என்ன தவிர வேறு எந்த ரவுடியும் இருக்க கூடாது"" போன்ற விக்ரம் பிரபு பேசும் வசனங்கள் கவனம் ஈர்த்துள்ளன.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!