
விக்ரம் 60ஐ முடித்த விக்ரம் - துருவ்
ஆக 14, 2021
Advertisement
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாசி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் விக்ரமின் 60ஆவது படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வந்த நிலையில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து விட்டார் கார்த்திக் சுப்பராஜ். இருப்பினும் மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் நேபாளத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பாக விரைவில் நடைபெற உள்ளதாம். இந்த படத்தில் துருவ் விக்ரம் போலீஸ் வேடத்திலும், விக்ரம், பாபி சிம்ஹா ஆகியோர் நெகட்டிவ் ரோலிலும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!