தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி
ஏப் 23, 2021
Advertisement
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தெலுங்கில் அவர் வில்லனாக நடித்து வெளிவந்த "உப்பெனா" படம் பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. அதற்கு முன்பு வெளியான "மாஸ்டர்" படத்தின் மூலமும் தெலுங்கு ரசிகர்களிடம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. சிரஞ்சீவி நடித்த "சைரா" படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அங்கு அறிமுகமானவர் விஜய் சேதுபதி.
"உப்பெனா" படத்திற்குப் பிறகு அவரைத் தேடி பல வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், அவற்றை ஒத்துக் கொள்ள மறுத்து வருகிறாராம். “தற்போது தெலுங்கு கற்று வருகிறேன். அதில் நன்றாக பேச ஆரம்பித்ததும், தெலுங்கில் அதிகம் நடிக்கிறேன்,” என அவரைத் தேடி வரும் தெலுங்குத் திரையுலகினரிடம் தெரிவிக்கிறாராம்.
விஜய் சேதுபதி தற்போது "மும்பை சகா" என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள முக்கிய நடிகர்களில் சீக்கிரமே "பான் இந்தியா" நடிகராக மாறிவிடுவார் போலிருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!