குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி
ஜன 18, 2021
நடிகர் விஜய் சேதுபதி ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். தமிழ் தொடங்கி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அவரது சினிமா எல்லை விரிந்து கொண்டே செல்கிறது. படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாட்களில் தனது திரையுலக நண்பர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பார். அந்த வகையில் நேற்று மதியம் நடிகை குஷ்புவின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த செய்தியை புகைப்படத்துடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள குஷ்பு, ""விஜய் சேதுபதி மதிய உணவு சாப்பிட எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். நிறைய பேச்சுக்களுடன் கூடிய எளிய வீட்டு உணவு. ஒரு சாதாரண நாளை மிகச்சிறந்த நாளாக மாற்றியதற்கு நன்றி விஜய்"" என்று பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!