பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்
டிச 11, 2023
Advertisement
நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிப்பால் அவதிப்படுகிறார். சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் உடன் இருமல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டதால் சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதன்பின் தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்திற்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் பரவியது. இதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மறுத்து வந்தார். மேலும் விஜயகாந்த் மீது ஏன் இவ்வளவு வன்மம் என மீடியாக்களையும் சாடினார்.
இந்நிலையில் விஜயகாந்த் குணமாகி வீடு திரும்பி உள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை, ‛‛சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று(டிச., 11) வீடு திரும்பினார்"" என தெரிவித்துள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!