விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் எந்த படத்திற்கு?
அக் 16, 2023
Advertisement
நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதைத் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து வருகிறார். மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து சமீபத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் கடை திறப்பு விழா ஒன்றில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது புதிய கெட்டப்பில் இருந்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது மிஷ்கின் படத்தில் நடிப்பதற்கான தோற்றம் என தகவல் வெளியானது. ஆனால், இப்போது கிடைத்த தகவலின் படி, இந்த புதிய கெட்டப் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் "விடுதலை 2" படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கான தோற்றம் என கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த ஆண்டு விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!