
அடுத்தடுத்து அப்டேட்களைக் கொடுத்த விஜய் 66 குழுவினர்
நகைச்சுவை நடிகர் யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் நடிகை சங்கீதா, பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோரும் இப்படத்தில் இணைவதாக நேற்று அறிவித்தனர். நேற்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் தமிழ் நடிகர் ஷாம் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு குடும்பக் கதையாக உருவாகிறது. படத்தைத் தமிழில் தயாரித்தாலும் எப்படியும் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடுவார்கள். எனவே, இரு மொழிகளிலும் அறிந்த நடிகர்கள், நடிகைகளை படத்தில் நடிக்க வைப்பதாகத் தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!