
குழந்தை எப்போது? - விக்னேஷ் சிவன் பதில்
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள், நயன்தாரா குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்திற்கும் விக்னேஷ் சிவன் பதிலளித்தார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர், குழந்தையை எதிர்பார்க்கலாமா என்று கேட்டார். அதற்கு ‛‛குழந்தை பெற்றுக் கொள்வது உங்களின் பார்ட்னர் மற்றும் உங்களுடைய முடிவுகளை பொறுத்தது"" என்று பதில் அளித்தார் விக்னேஷ் சிவன். ரசிகர்கள் நயன்தாராவின் புகைப்படங்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்க அவரும் அப்படியே செய்தார். அதனால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் செல்பியை விக்னேஷ் சிவன் வெளியிட்டார். அந்த படம் வைரலாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!