பழம்பெரும் நடிகர் சீனிவாசன் காலமானார்
ஜூன் 27, 2025
Advertisement
சென்னை நடன இயக்குனர் புலியூர் சரோஜா கணவரும், நடிகருமான சீனிவாசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
சென்னை, அசோக் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சீனிவாசன், 95. இவர், பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் கணவர். பாரதிராஜாவின் "புதியவார்ப்புகள், கிழேக்கே போகும் ரயில்" உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். சினிமாவில் வசனகர்த்தா, இயக்குனர் என பல வகையில் பணியாற்றியுள்ளார். அரசின் "கலைமாமணி" உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவர், வயது மூப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் காலமானார். இறுதிச்சடங்கு நாளை வடபழனியில் நடக்க உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த சீனிவாசனுக்கு சத்திய நாராயணன் என்ற மகன் இருந்தார். அவர், 30 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!