5 மொழிகளில் தயாரான வெங்கட்பிரபுவின் வெப் சீரிஸ்
ஜன 27, 2021
Advertisement
வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ள பார்ட்டி படம் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் வெப்சீரிஸ் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் இயக்கி முடித்துள்ள வெப் சீரிஸ் "லைவ் டெலிகாஸ்ட்".
இதில் காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி, டேனியல் அன்பே போப், சுப்பு பஞ்சு, பிரேம்ஜி அமரன், யோகிபாபு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி அமரன் இசை அமைத்துள்ளார். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி உள்ளது. வருகிற பிப்ரவரி 12ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது ஆக்ஷன் ஹாரர் வகை படம். இதில் காஜல் அகர்வால் பேயாக நடித்திருக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!