கவனம் ஈர்த்த வீட்ல விசேஷம் பட டிரைலர்
மே 26, 2022
Advertisement
ஆர்ஜே பாலாஜியின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் "வீட்ல விசேஷம்". ஹிந்தியில் வெளியான "பதாய் ஹோ" படத்தின் ரீமேக் தான் இந்த படம். ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சத்யராஜ், ஊர்வசி, நடிகை கேபிஏசி லலிதா, யோகிபாபு, "குக் வித் கோமாளி" புகழ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஜூன் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .
இந்நிலையில் நேற்று நடந்த லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் பிளே ஆப் போட்டியின் இடையில் இப்படத்தின் டிரைலரை ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ளார். திருமண வயதில் பையன்கள் உள்ள நிலையில் பாட்டியாகும் வயதில் நடிகை ஊர்வசி கர்ப்பமாக இருப்பது போன்ற கதைக்களத்தில் காமெடியாக இந்த படத்தை உருவாக்கி உள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!