
கவனம் ஈர்த்த ‛வாசுவின் கர்ப்பிணிகள் பர்ஸ்ட் லுக்
ஜூன் 06, 2022
Advertisement
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛ஜக்காரியாயுடே கர்ப்பிணிகள்". இந்த படம் தமிழில் படம் ‛வாசுவின் கர்ப்பிணிகள்" என்ற பெயரில் ரீ-மேக் ஆகிற வருகிறது. மணி நாகராஜ் இயக்குகிறார். நான்கு விதமான கர்ப்பிணி பெண்களை சந்திக்கும் ஒரு மருத்துவரின் கதை இது. இந்த படத்தில் நீயா நானா கோபிநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, நடிகைகள் வனிதா, சீதா மற்றும் லீனா குமார் ஆகியோர் கர்ப்பமாக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் ஆண்டனி வெளியிட்டார். இந்த படத்தை விஜய்யுன் உறவினரும், மாஸ்டர் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!