
முடிவுக்கு வந்தது அநீதி
‛கைதி, மாஸ்டர்" படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ‛சார்பட்டா பரம்பரை" படத்தில் மாரியம்மாவாக நடித்த துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். வனிதா விஜயகுமார், "நாடோடிகள்" பரணி,பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, அறந்தாங்கிநிஷா,காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குனர்கள் எஸ்.கே. ஜீவா, அருண் வைத்தியநாதன், சுப்பிரமணிய சிவா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இதன் படிப்பிடிப்புகள் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. படப்பிடிப்பு பிந்தய பணிகள் அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!