ஓடிடி-யில் நான்கு மொழிகளில் வெளியான வாரிசு
பிப் 22, 2023
Advertisement
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் ஜனவரி 11ம் தேதி வெளிவந்த படம் "வாரிசு". இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தியேட்டர்களில் வெளியானது. சுமார் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இன்று படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகி உள்ளது.
தமிழில் "வாரிசு", தெலுங்கில் "வாரசுடு" என வெளியான படம் கன்னடத்தில் "வாரஸ்டரா" என்றும், மலையாளத்தில் "வம்ஷாஜன்" என்றும் வெளியாகி உள்ளது. தியேட்டர்களில் இப்படம் வெளியான போது, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகவில்லை. ஆனால், ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
"வாரிசு" தியேட்டர்களில் வெளியான போது போட்டியாக வெளியான அஜித்தின் "துணிவு" படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது "வாரிசு" படமும் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளதால் இந்தப் படத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!