
பொங்கலுக்கு வாரிசு : தீபாவளி தினத்தில் புதிய போஸ்டர் வெளியீடு
இந்த படம் துவங்கியபோதே பொங்கல் ரிலீஸ் என்று சொல்லி தான் அறிவித்தார்கள். அதன்படி தற்போது தீபாவளி தினத்தில் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு உலகம் முழுக்க பொங்கலுக்கு வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரில் விஜய், கையில் பெரிய சுத்தியல் உடன் எதிரிகளை துவம்சம் செய்துவிட்டு ஆக்ரோஷமாக நடந்து வருவது போன்று வடிவமைத்துள்ளனர். இதை வரவேற்றுள்ள விஜய் ரசிகர்கள் வாரிசு பொங்கல் என்ற பெயரில் டிரெண்ட் செய்தனர்.
பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித்தின் துணிவு படமும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…