
வணங்கான் ரிலீஸ் தேதியில் மாற்றம்?
ஜூலை 21, 2024
பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் படம் "வணங்கான்". இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. இதனால் இத்திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதால் இப்போது ஆகஸ்ட் 15ம் தேதி வணங்கான் வெளியாவதில் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!