
சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது
ஆக 11, 2022
Advertisement
ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில் பி .வாசு இயக்கிய சந்திரமுகி படம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, மீண்டும் வடிவேலு இணைந்திருக்கிறார். இதையடுத்து சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு மீண்டும் காமெடியனாக நடிக்கிறாரா? இல்லை குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறாரா? என்கிற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், இப்படத்திலும் வடிவேலு சந்திரமுகி படத்தில் நடித்தது போலவே முருகேசன் என்ற அதே கேரக்டரில் மீண்டும் நடிப்பதாக கூறுகிறார்கள். அதோடு முதல் பாகத்தை மிஞ்சும் அளவுக்கு அதிரடியான காமெடி காட்சிகளில் நடிக்கிறார். குறிப்பாக, லாரன்ஸ் - வடிவேலு இணைந்து நடிக்கும் காமெடி காட்சிகள் சந்திரமுகி படத்தைப் போலவே இந்த படத்திலும் பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகும் என்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!