
சிங் இன் த ரெயின் - வடிவேலு, பிரபுதேவா சந்திப்பு
படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் அப்போதெல்லாம் சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பாகும். இப்போது கூட அந்தக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.
அதிலும் ஒரு காட்சியில் வடிவேலு, "சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்" என்று பாடி நடிக்கும் காட்சியை யாராலும் மறக்க முடியாது. பிரபுதேவா, வடிவேலு ஆரம்பக் காலத்திலிருந்தே சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்.
பிரபுதேவா, வடிவேலு தற்போது சந்தித்த வீடியோ ஒன்றை பிரபுதேவா பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு அந்த "சிங் இன் த ரெயின்" பாடலைப் பாடி, பிரபுதேவாவைக் கட்டிப் பிடித்து மகிழ்ந்துள்ளார். "நட்பு" என ஒரே ஒரு வார்த்தையில் அந்த சந்திப்பு பற்றி பதிவிட்டுள்ளார் பிரபுதேவா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!