300 மில்லியன் பார்வைகளைக் கடந்த வாயாடி பெத்த புள்ள
ஜூலை 12, 2025
Advertisement
சிவகார்த்திகேயன் தயாரித்து சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் மற்றும் பலர் நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், 2018ல் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற படம் "கனா".
அப்படத்தில் இடம் பெற்ற "வாயாடி பெத்த புள்ள" பாடல் படத்திற்கே ஒரு விசிட்டிங் கார்டு ஆக அமைந்தது. திபு நினன் தாமஸ் இசையில் ஜிகேபி எழுதிய அப்பாடலை சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா, சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் பாடியிருந்தனர். அதன் லிரிக் வீடியோ வெளியானதுமே "இன்ஸ்டன்ட் ஹிட்" ஆக அமைந்தது.
அந்த வீடியோ தற்போது யு டியூப் தளத்தில் 300 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. பத்துக்கும் குறைவான தமிழ் சினிமா பாடல்கள்தான் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அந்தப் பட்டியலில் இந்தப் பாடலும் இடம் பிடித்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!