திருத்தப்பட்ட வீடியோவுடன் வா வாத்தியார் தெலுங்கு ரிலீஸ்
மார் 04, 2026
Advertisement
நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்த "வா வாத்தியார்" படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் படுதோல்வி அடைந்தது.
படத்தைத் தெலுங்கில் "அண்ணாகாரு வொஸ்தாரு" என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியிடுவதாக அறிவித்தார்கள். ஆனால், பொங்கலுக்கு தெலுங்கிலும் பலத்த போட்டி இருந்ததால் தியேட்டர்களில் இப்படம் வெளியாகவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டார்கள்.
எம்ஜிஆர் தோற்றத்தில் கார்த்தி சில ஹீரோயிசம் செய்வதுதான் படத்தின் கதை. தெலுங்கிற்காக எம்ஜிஆர் என்பதை என்டிஆர் என மாற்றி இருந்தார்கள். ஆனால், தெலுங்கில் ஓடிடி தளத்தில் வெளியாகும் போது வீடியோவில் எம்ஜிஆர் ஆகவும் வசனங்கள் என்டிஆர் பற்றி குறிப்பிடுவதாகவும் அமைந்து குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. அதைத் தெலுங்கு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்திருந்தார்கள்.
எனவே, தற்போது எம்ஜிஆர் வீடியோவை, என்டிஆர் வீடியோவாக சரியாக மாற்றி மார்ச் 6ம் தேதி வெளியிட உள்ளார்கள். இதற்காக கார்த்தி பேசிய ஒரு வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!