
எம்ஜிஆர் நினைவுநாளில் வா வாத்தியார் வருகிறார்…???
சுமார் 21 கோடி ரூபாய் கடன் தொகையை முழுவதுமான செட்டில் செய்து படத்தை வெளியிடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இப்படத்தின் மீதுள்ள பிரச்னைகளை தீர்த்து வைக்கும் பேச்சுவார்த்தையிலும் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாம்.
டிசம்பர் 24ம் தேதி எம்ஜிஆர் நினைவுநாளை முன்னிட்டு படத்தை வெளியிடும் தீவிர முயற்சியில் இருக்கிறார்களாம். இப்படத்தில் தீவிர எம்ஜிஆர் ரசிகர் ஆகத்தான் கார்த்தி நடித்துள்ளார். அதனால்தான் படத்தின் பெயரும் "வா வாத்தியார்". இதற்கு மேலும் வாத்தியாரைக் காக்க வைத்துவிடாதீர்கள் என்றுதான் எம்ஜிஆர் ரசிகர்களும் கார்த்தி ரசிகர்களும் நினைப்பார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!